MCCBCHST: ஐந்து மாநிலங்களில் சட்டம் திருத்தப்பட வேண்டும் என விரும்புகிறது

ஐந்து மாநிலங்களின் அரசமைப்பில் குழந்தைகள் மதம் மாற்றத்தில்  பெற்றோர்களின் பங்கு சம்பந்தப்பட்ட விஷயத்தில் திருத்தம் செய்யப்படுவதற்கு  ஆதரவு திரட்டப் போவதாக MCCBCHST என்ற மலேசிய பௌத்த, கிறிஸ்துவ,  இந்து, சீக்கிய, தாவே ஆலோசனை மன்றம் அறிவித்துள்ளது.

“கூட்டரசு அரசமைப்புக்கு இணங்க அந்த ஐந்து மாநிலங்களும் தங்கள்
அரசமைப்பில் திருத்தம் செய்வதை உறுதி செய்வதற்கு மன்றம் போராடும்,” என  MCCBCHST தலைவர் ஜாஹிர் சிங் நேற்றிரவு அந்த மன்றத்தின் 30வது ஆண்டு  நிறைவு விருந்தில் கூறினார்.

பேராக், மலாக்கா, நெகிரி செம்பிலான், சரவாக், கெடா ஆகிய மாநிலங்கள்  குழந்தைகள் மதம் மாற்றம் செய்யப்படுவதை முடிவு செய்வதற்கு பெற்றோர்களில்  ஒருவருடைய ஒப்புதல் போதும் எனக் கூறுவதை அவர் குறிப்பிட்டார்.

குழந்தைகள் மதம் மாற்றம் செய்யப்படுவதற்கு பெற்றோர் இருவருடைய ஒப்புதல்  தேவை இல்லை எனச் சொல்வது இயற்கை நீதிக்கு முரணானது என  அண்மையில் உயர் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்ததை ஜாஹிர் சுட்டிக் காட்டினார்.