பேராயர்: ‘அல்லாஹ்’ என்னும் சொல் பயன்பாடு மீதான நஜிப்பின் தீர்வு நிலை நிறுத்தப்பட வேண்டும்

herald‘அல்லாஹ்’ என்னும் சொல்லை கத்தோலிக்கர்கள் பயன்படுத்துவதற்கு  விதிக்கப்பட்ட தடை அரசமைப்புக்கு முரணானது என கோலாலம்பூர் உயர்  நீதிமன்றம் 2009ம் ஆண்டு தீர்ப்பளித்த ஈராண்டுக்குள் அரசாங்கம் அந்தப்  பிரச்னைக்கு 10 அம்சத் தீர்வை முன் வைத்தது.

அதன் அடிப்படையில் ஹெரால்ட் மீதான முறையீட்டை உள்துறை அமைச்சும்  அரசாங்கமும் தொடருவது குறித்து கத்தோலிக்க பேராயர் மர்பி பாக்கியம் கேள்வி  எழுப்பியுள்ளார்.

அந்த முறையீடு ஆகஸ்ட் 22ம் தேதி  முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றது.herald1

2011ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கையெழுத்திட்ட  அந்த 10 அம்சத் தீர்வை அமைச்சரவையும் ஏற்றுக் கொண்டுள்ளது. அந்தத்  தீர்வை தெரிவிக்கும் கடிதம் மலேசிய கிறிஸ்துவ சம்மேளனத் தலைவர் இங் மூன்  ஹிங்-கிற்கு அனுப்பப்பட்டது.

அந்தத் தீர்வின் கீழ் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைக் கொண்ட பாஹாசா
மலேசியா/பாஹாசா இந்தோனிசியா உட்பட அனைத்து மொழி பைபிள்களை இறக்குமதி செய்வதற்கும் வெளியிடுவதற்கும் அரசாங்கம் அனுமதித்தது.

10 அம்சத் தீர்வில் கையெழுத்திடுவதற்கு முன்னர் 2009ம் ஆண்டு டிசம்பர் 31ம்  தேதி வழங்கப்பட்ட அந்தத் தீர்ப்பை நஜிப் அறிந்திருக்க வேண்டும் என்றும்  பேராயர் கூறினார்.