குவான் எங்: அந்தத் துப்பாக்கிகள் எங்கிருந்து வந்தன ?

gunsவன்முறைக் குற்றங்கள் திடீரென அதிகரித்து விட்ட குறுகிய கால கட்டத்துக்குள்  கிரிமினல்களுக்கு இவ்வளவு ஆயுதங்கள் எப்படிக் கிடைத்தன என்று டிஏபி  தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்தகைய குற்றங்களுக்கு முன்னாள் அவசர காலச் சட்ட கைதிகள் மீது பழி  போட்டாலும் அவர்களுக்கு அந்த ஆயுதங்கள் எங்கிருந்து கிடைத்தன என்னும்  கேள்வி எழுவதாக அவர் சொன்னார்.

“அவசர காலச் சட்டம் ரத்துச் செய்யப்பட்டதால் பல கிரிமினல்கள்
விடுவிக்கப்படுவதற்கு வழி வகுத்து விட்டது எனப் பழி போடுவது, மலேசியாவில்  திடீரென துப்பாக்கிகளின் விநியோகம் அதிகரித்து விட்டதை விளக்கவில்லை.”

“அந்த துப்பாகிகள் எப்படி மலேசியாவுக்குள் நுழைந்தன ? அத்தகைய ஆயுதங்கள்  விநியோகம் செய்யப்படுவதற்கான ஆதாரத்தை போலீஸ் கண்டு பிடித்து அதனைத்  தடுக்க வேண்டும்,” என லிம் இன்று விடுத்த ஒர் அறிக்கையில் கேட்டுக்  கொண்டார்.

 

TAGS: