பாதுகாப்பு விவகாரங்களில் பிஎன் முன்னாள் அமெரிக்க அதிபர் ‘புஷ்’ போலவே சிந்திக்கிறது

1 anwarபாதுகாப்பு விவகாரங்களுக்குத் தீர்வு காண்பதில் பாரிசான் நேசனல், முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் என்ன செய்தாரோ அதைத்தான் செய்கிறது என்கிறார் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்.

அரசாங்கத்துக்கு,  அதிகரித்துவரும் குற்றச்செயல்களை ஒடுக்குவதற்குக் கடுமையான சட்டங்கள்  கொண்டுவருவதைத் தவிர்த்து  வேறு வகையில்  சிந்திக்கத்  தெரியவில்லை.

“இதுதான் புஷ் சிந்தனை.  அதனால் அப்பாவி மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்”.  இன்று பிகேஆர் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அன்வார் இவ்வாறு குறிப்பிட்டார்.