அப்துல்லா: நான் அம்னோவுக்கு எதிராக மாறவில்லை

1 abdullahமுன்னாள் பிரதமர்  அப்துல்லா அஹ்மட் படாவி,  தாம் அம்னோவைக் குறைகூறி இருப்பதை வைத்து அக்கட்சிக்கு எதிரியாகி விட்டதாகக் கூறப்படுவதை  மறுத்துள்ளார்.

‘Awakening’ என்னும்  நூலுக்கு வழங்கிய நேர்காணல் குறித்து ‘பாக் லா’ என்று அழைக்கப்படும்  அப்துல்லா அவ்வாறு கூறினார்.

அந் நூல் தாம் எழுதியது அல்ல என்பதை பாக் லா தெளிவுபடுத்தினார்.  அது,  அவருடைய நேர்காணலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட  ஒரு நூல். அதனுடன் நேரடி தொடர்பு இல்லை என்பதால் அதன் வெளியீட்டுக்குக்கூட செல்லப்போவதில்லை என்றார்.

அந்நூலில் அம்னோவைப் பல இடங்களில் குறை சொல்லியுள்ள அப்துல்லா, அதற்குக் காரணம் உண்டு என்றார்.

“அம்னோ  மக்களிடமிருந்து தொடர்ந்து ஆளும் உரிமையையும் நம்பிக்கையையும் பெற்றிருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அப்படிச் சொன்னேன்”.

மற்றபடி, எந் நிலையிலும் கட்சியைவிட்டு ஒதுங்கப்போவதில்லை என்பதை முன்னாள் அம்னோ தலைவருமான அப்துல்லா வலியுறுத்தினார்.