நஜிப் ஒற்றுமை அரசாங்கத்தை நாடுகிறார்; அன்வார் ‘உறுதிப்படுத்துகிறார்’

1-yusufமாற்றரசுக் கட்சியுடன் இணைந்து ஒற்றுமை அரசாங்கம் அமைப்பதில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நாட்டம் கொண்டிருப்பதாகவும் அதை மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் உறுதிப்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நஜிப், கமுக்கமான முறையில் இந்தோனேசிய உதவித் தலைவர் யூசுப் கல்லா  (வலம்) மூலமாக  ஒற்றுமை அரசாங்கம் பற்றி பரிசீலிக்கும்படி  அன்வாருக்கு தூது அனுப்பிக் கொண்டிருப்பதாக ஏசிய செண்டினல் (Asia Sentinel)  செய்தித் தளம் கூறியுள்ளது.

ஆகக் கடைசியாக, கடந்த மாத நடுப்பகுதியில் யூசுப்  கோலாலும்பூரில்  இருந்தபோது  அதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக  அது கூறிற்று.