அமைச்சர்: அரசாங்கம் எம்ஏஎஸ்-ஸை விற்பது நல்லது

1 idrisஅரசாங்கம் மலேசிய விமான நிறுவனத்தை (எம்ஏஎஸ்) விற்றுவிட்டு வான்பயணத் தொழிலைவிட்டு வெளியேற வேண்டும் என்று பிரதமர்துறை அமைச்சர் இட்ரிஸ் ஜாலா கூறுகிறார்.

அதற்காக, விமான நிறுவனத்தை மிகக் குறைந்த விலைக்கு விற்பதும் நல்லதல்ல என்று அவர் எச்சரித்தார்.

“அதை விற்கத்தான் வேண்டும். ஆனால், நட்டம் வரும் அளவிற்கு கூடாது……. ஏனென்றால் அதில் பொதுப் பணம் சம்பந்தப்பட்டுள்ளது. அது பங்குச் சந்தையில் பதிவுபெற்ற ஒரு நிறுவனம்”, என்றாரவர்.

இட்ரிஸ், ஒரு காலத்தில் எம்ஏஎஸ்-ஸின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.