துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு சிகிச்சை பெற்றுவரும் குற்ற-எதிர்ப்பு ஆர்வலர் ஆர்.ஸ்ரீசஞ்சீவனின் தந்தை, நெகிரி போலீஸ் வழக்கு விசாரணையிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்றும் கோலாலும்பூரில் உள்ள போலீஸ் தலைமையம் விசாரணையைத் தொடர வேண்டும் என்றும் விரும்புகிறார்.
சஞ்சீவன் சுடப்பட்டது நெகிரி செம்பிலானில் என்பதால், பாஹாவ் போலீசும் சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைமையகமும் விசாரணை மேற்கொண்டுள்ளன.
தம் மகன் நெகிரி போலீசார் ஊழலில் ஈடுபட்டிருப்பதாக கூறியிருப்பதை பி.ராமகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார்.
“நெகிரி செம்பிலான் போலீசாருக்கு எதிராக என் மகன் சில புகார்களைச் செய்திருப்பதால் அவர்களே விசாரணை செய்வதென்றால் அது ஆதாய முரண் (conflict of interest) ஆகலாம்”, என ட்ரேவர்ஸ் போலீஸ் நிலையத்தில் செய்த புகாரில் அவர் கூறியுள்ளார்.
“ஆகவே, புக்கிட் அமான் விசாரணையைத் தொடர வேண்டும்”, என்றாரவர்.
உண்மைதான். இங்கே முன்னால் பலே கேடியும் போலீஸ் உயர்நிலை அதிகாரியும் ஒரே மேசையில் அமர்ந்து “குளிர் பானம்” அருந்துவது சகஜம்.