KLIA2 கட்டுமான நிறைவு ‘உலகில் மிகப் பெரிய மர்மம்’

klia2KLIA2 என்ற இரண்டாவது கோலாலம்பூர் அனைத்துலக விமான முனையத்தின்  கட்டுமானம் நீடித்துக் கொண்டே போகிறது.

அது எப்போது நிறைவு பெறும் என ஏர் ஏசியா குழு தலைமை நிர்வாக அதிகாரி  டோனி பெர்னாண்டஸ் கூட கேள்வி எழுப்பியுள்ளார்.

உண்மையில் அந்த குறைந்த கட்டண விமான முனையத்தின் கட்டுமானம் ‘உலகில்  மிகப் பெரிய மர்மங்களில் ஒன்று’ என அவர் வருணித்துள்ளார்.klia21

KLIA2 கட்டுமானத்தில் என்ன தான் நடக்கின்றது ? உலகில் மிகப் பெரிய  மர்மங்களில் அதுவும் ஒன்று. அது நிறைவு பெறும் தேதி ஒவ்வொரு வாரமும்  தள்ளிக் கொண்டே போகிறது,” என அவர் குளோபல் மலேசியா தொடர் உரையில்  தெரிவித்தார்.

KLIA2 கட்டுமானத் திட்டம் மலேசியாவில் வெளிப்படையான போக்கு
போதுமானதாக இல்லை என்பதை எடுத்துக் காட்டுவதாகவும் அவர், பெமாண்டு  என்ற அரசாங்கத்தின் அடைவு நிலை, நிர்வாகப் பட்டுவாடா பிரிவு ஏற்பாடு  செய்த அந்த நிகழ்வில் கூறினார்.

‘பழி போடுவதற்கு யாராவது ஒருவர் எப்போதும் இருக்கின்றார். நீங்கள் அதனை  அல்லது இதனை எதிர்க்கின்றீர்கள் என சொல்கின்றனர். அது முடிவுக்கு வர  வேண்டும். பொருளாதாரம் நாடு என்ற முறையில் நாம் முதிர்ச்சி அடைய  வேண்டும்,” என்றும் டோனி பெர்னாண்டஸ் சொன்னார்.