தொழுகை இல்லங்களை (சூராவ்) வேறு வகையில் பயன்படுத்தக்கூடாது என இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் அப்துல் மாலிக் அபுல் காசிம் வலியுறுத்தினார்
இது பற்றி தங்குவிடுதிகள், ஓய்வுத்தலங்கள், விற்பனை மையங்கள் ஆகியவை எச்சரிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
“சூராவ்களைப் பயன்படுத்துவது பற்றி அவர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறேன்….அவற்றை முஸ்லிம்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும், வேறு நோக்கங்களுக்காக அவற்றைப் பயன்படுத்தக்கூடாது”, என்று அப்துல் மாலிக் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.