13வது பொதுத் தேர்தலில் பேராக் செலாமா சட்டமன்றத் தொகுதியில் பிஎன் அடைந்த வெற்றியை ஈப்போவில் தேர்தல் நீதிமன்றம் நிலை நிறுத்தியுள்ளது.
தேர்தல் முடிவை ரத்துச் செய்யுமாறு அந்தத் தொகுதியில் போட்டியிட்ட பாஸ் வேட்பாளர் முகமட் அக்மால் கமாருதின் கொடுத்த மனுவை அது செலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்தது.
தேர்தல் மனுவுக்கான காரணங்களையும் உண்மை விவரங்களையும் தர வேண்டும் எனக் கூறும் தேர்தல் விதிமுறைகளை பின்பற்ற முகமட் அக்மால் தவறி விட்டதாக நீதிபதி அப்துல் ரஹ்மான் செப்லி கூறினார்.
செலாமா சட்ட மன்ற உறுப்பினர் முகமட் டாவுட் முகமட் யூசோப்புக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் தலா 50,000 ரிங்கிட்டை செலவுத் தொகையாக முகமட் அக்மால் கொடுக்க வேண்டும் என்றும் அவர் ஆணையிட்டார்.
கடந்த தேர்தலில் முகமட் அக்மால் 619 வாக்குகள் வித்தியாசத்தில் பிஎன் வேட்பாளரிடம் தோல்வி கண்டார்.
Wow! Legal cost RM 100,000. What a corrupted democracy!