ஜோகூர் சூராவ் விவகாரத்தில் உயர் நிலைப் புத்த பிக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்

surauஜோகூர், கோத்தா திங்கியில் சூராவ் ஒன்றில் தியானம் செய்த சிங்கப்பூரை சேர்ந்த பௌத்தர்கள் குழு ஒன்று சார்பில் எல்லா முஸ்லிம்களிடமும் பௌத்த மஹா விஹாரா ஆலயத்தின் உயர் நிலைத் தலைமை பிக்கு மன்னிப்புக் கேட்டுக்  கொண்டுள்ளார்.

ஒய்வுத் தலம் ஒன்றில் இருந்த சூராவில் குழு ஒன்று தியானம் செய்வதைக் காட்டும் அண்மைய வீடியோ ஒளிப்பதிவு பற்றிக் குறிப்பிட்ட அந்த உயர் நிலைத் தலைமை பிக்கு கே ஸ்ரீ தம்மரத்னா நாயக்கே மஹா தேரா, பௌத்தர்கள் தங்கள் சொந்த சமயக் கடமைகளை நிறைவேற்றும் போது மற்றவர்களுடைய சமய
உணர்வுகளையும் மதிக்க வேண்டும் எனக் கூறினார்.

“பௌத்தர்கள் எல்லா நேரத்திலும் புத்தர் பிரான் வலியுறுத்தியுள்ள அடிப்படைக் கோட்பாடுகளை அறிந்திருக்க வேண்டும். நம்பிக்கையும் வைத்திருக்க வேண்டும்: ஒருவருடைய சொந்த மகிழ்ச்சியை மற்றவர்களுடைய மகிழ்ச்சியின்மையிலிருந்து
உருவாக்குவது முடியாத காரியமாகும்”, என்றார் அவர்.