இஸ்லாமிய அறிஞர்கள்: சூராவ் பிரச்னையை விவேகமாகக் கையாளுங்கள்

surauஜோகூரில் சூராவ் ஒன்றில் பௌத்தர்கள் தியானம் செய்த விவகாரத்தை  அதிகாரிகள் விவேகமான முறையில் தீர்க்க வேண்டும் என இஸ்லாமிய  அறிஞர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இஸ்லாத்தைக் கண்டு முஸ்லிம் அல்லாதார் அச்சமடையாமல் இருப்பதற்கு அந்தப்  பிரச்னையை விவேகமாக கையாளுவது அவசியம் என அவர்கள் கருதுகின்றனர்.surau1

அதிகாரிகள் கடுமையான போக்கைப் பின்பற்றுவதற்குப் பதில் ‘சமயங்களுக்கு  இடையிலான கலந்துரையாடலை’ நடத்துவது பற்றிப் பரிசீலிக்க வேண்டும் என  Persatuan Ulama Malaysia (PUM) தலைமைச் செயலாளர் முகமட் ரோஸ்லான்  முகமட் நோர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

அவரது கருத்தை பிரபலமான சமய ஆசிரியர் ஹலிம் ஹபிட்ஸும் ஒப்புக்  கொண்டார்.

“நெருப்பைக் கொண்டு நெருப்புடன் சண்டை போடக் கூடாது” என அவர்
அனைவருக்கும் அறிவுரை கூறினார். “அத்தகைய பிரச்னைகளை எழுப்புவது தவறு அல்ல. என்றாலும் வேகமாக நாம்  தீர்ப்புச் சொல்லக் கூடாது. நாம் பல இன, பல சமய நாட்டில் வாழ்வதால்  அதனை ஆரோக்கியமான முறையில் விவாதிக்க வேண்டும். ஒருவரை ஒருவர்  மதிக்க வேண்டும்,” என பெர்னாமா Radio24 அடிக்கடி உரையாற்றும் ஹலிம்  முகநூல் பதிவில் எழுதியுள்ளார்.

surau2அந்த சூராவைப் பயன்படுத்துவதற்கு அனுமதித்த ஒய்வுத் தல உரிமையாளர்  இஸ்லாத்தை சிறுமைப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருக்க மாட்டார் என  மலேசிய அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் மாஸ்லீ  மாலிக் எண்ணுகிறார்.

“நமது ஊடகங் ள் அளவுக்கு அதிகமாக அதனை பெரிதாக்கி விட்டன. சில தீவிர  முஸ்லிம்கள் அதனை பொருத்தமில்லாத முறையில் பயன்படுத்துகின்றனர்,” என  இஸ்லாமிய நீதி நிர்வாக விரிவுரையாளரான அவர் சொன்னார்.