“நஜிப் ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்துவது மீது கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும்”

heraldமுஸ்லிம் அல்லாதார் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்த அனுமதித்த  2011ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகரித்த 10 அம்சத் தீர்வு மீதான  வாக்குறுதியை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு பினாங்கு பிஎன் தலைவர்  ஒருவர் நினைவுபடுத்தியுள்ளார்.

“நஜிப் தமது வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை என்றால் அவரை மீண்டும் நம்ப  முடியுமா ?” என பினாங்கு கெராக்கான் கட்சியின் மனித உரிமைகள், சட்ட  விவகாரப் பிரிவுத் தலைவர் பல்ஜித் சிங் வினவினார்.herald1

“சொன்ன சொல்லை காப்பாற்றுகின்றவர் என நஜிப் மதிக்கப்படுகிறார். தாம் அந்த  மரியாதைக்கு உரியவர் என்பதை அவர் காட்ட வேண்டிய நேரம் இதுவாகும்.”

அம்னோ தேர்தல்கள் நெருங்கும் வேளையில் தங்களை இன, சமய ‘காவலர்களாக’  காட்டிக் கொள்ள அந்தக் கட்சியின் தலைவர்கள் போட்டி போடுவதாகத் தெரிகிறது  என்றும் பல்ஜித் சொன்னார்.