மலேசியர்களுடைய சமய உணர்வுகளைத் தொடும் வகையில் சமய பிரச்னைகள் பெரிதாக்கப்பட்டு பரபரப்பாக்கப்பட்டு வரும் விதத்தை பாஸ் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர் முஜாஹிட் யூசோப் ராவா கண்டித்துள்ளார்.
இந்த நிலை மலேசியர்களுக்கும் இஸ்லாத்துக்கும் முழுமையாக நல்லதல்ல என அவர் சொன்னார்.
சிங்கப்பூர் பௌத்த குழு ஒன்று ஜோகூரில் சூராவைப் பயன்படுத்தியது,
இஸ்லாத்தை அவமானப்படுத்தியதாக நாய் பயிற்றுநர் மஸ்னா முகமட் யூசோப் கைது செய்யப்பட்டது போன்ற ‘ஆங்காங்கே நிகழும் விவகாரங்கள்’ போலீஸ் துணையுடன் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் தீர்த்துக் கொண்டிருக்க முடியும் என்றார் அவர்.
முஸ்லிம் ஒருவர் தவறு செய்தால் அது முழு சமூகத்தையும் பிரதிநிதிக்கவில்லை. முஸ்லிம் அல்லாதாருக்கும் அது பொருந்தும் என தென்கிழக்காசிய சமயங்களுக்கு இடையில் அமைதிக்கான கலந்துரையாடலுக்கு தலைமை தாங்கும் யூசோப் ராவா
சொன்னார்.
முஸ்லிம் அல்லாதாரிடமும் மலாய்க்காரர் அல்லாதாரிடமும் அச்சத்தையும் வெறுப்புணர்வையும் தோற்றுவிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகின்றது என்றும் அவர் கருதுகிறார்.
Dear editor, why some of us could not write our comments in Tamil? Please check and rectify