இஸ்லாத்தையும் நபி முகமட்டையும் இழிவுபடுத்தியதாக கூறப்படும் முகநூல் கணக்கு ஒன்றின் உரிமையாளர் மீது Martabat Jalinan Muhibbah Malaysia (MJMM) அமைப்பு போலீசில் புகார் செய்துள்ளது.
ஜுன் 24ம் தேதி தமது முகநூல் கணக்கில் இஸ்லாத்தை அவமானப்படுத்தியதற்காக சாலி யென் என்பவர் மீது போலீசும் உள்துறை அமைச்சும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாம் விரும்புவதாக அந்த அமைப்பின் தலைவர் அப்துல் ரானி
குலுப் அப்துல்லா கூறினார்.
“முஸ்லிம் என்ற முறையில் அந்தப் பதிவு பெரிதும் அவமானப்படுத்துகிறது என்றும் மரியாதையற்றது என்றும் நாங்கள் எண்ணுகிறோம்,” கோலாலம்பூர் டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் செய்த பின்னர் அவர் சொன்னார்.
தேச நிந்தனைச் சட்டத்தின் 4வது பிரிவின் கீழ் அந்தப் புகார் விசாரிக்கப்படுவதாக டாங் வாங்கி துணை ஒசிபிடி சூப்பரிடெண்ட் நோர் அஸ்மான் முகமட் யூசோப் கூறினார்.