‘சர்ச்சைக்குரிய காணொளிகளைக் கண்டு ஆத்திரத்துடன் கத்திக் கூச்சலிடுவதைவிட, அவற்றை உரிய அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்வதே மேல் என்று தொடர்பு, பல்லூடக துணை அமைச்சர் ஜைலானி ஜொஹாரி அறிவுறுத்தியுள்ளார்.
“அப்படிப்பட்ட காணொளியைக் காண்பவர்கள் அதைப் பரப்பிவிடக் கூடாது.
“ (அதன்) உள்ளடக்கம் உணர்ச்சிவசப்பட வைப்பதாக இருந்தால் (சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம்) புகார் செய்ய வேண்டும் அல்லது அகற்றிவிட வேண்டும்”, என்றார்.
சமய உணர்வுகளைத் தூண்டிவிடும் வகையில் இணையத்தில் இடம்பெற்றுவரும் காணொளிகள் பற்றிக் கருத்துரைத்தபோது ஜைலானி இவ்வாறு கூறினார்.