TPPA பேச்சுக்களை விட்டு அரசாங்கம் விலக வேண்டும்: இட்ரிஸ்

1-idrisபசிபிக் தோழமை ஒப்பந்தத்தை (TPPA) எதிர்ப்பவர்கள், மலேசியா அந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுக்களிலிருந்து  வெளியேற வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

“அமெரிக்காவுடனான  தடையில்லா வாணிக ஒப்பந்தப் பேச்சுக்களைப் பல நாடுகள் முறித்துக் கொண்டிருப்பதுபோல் மலேசியாவும் இந்தப் பேச்சுக்களிலிருந்து வெளியேற வேண்டும்”, என்று பினாங்கு பயனீட்டாளர் சங்க(கேப்)த் தலைவர் எஸ்.எம். முகம்மட் இட்ரிஸ் கூறினார். .

“மலேசியா, மிகப் பலரான பொதுமக்களின் நலனுக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டுமே தவிர நிறுவன அல்லது வணிகர்களின் நலனுக்கு அல்ல”, என்றாரவர்.

தடையில்லா வாணிக ஒப்பந்தம் செய்துகொள்வது தொடர்பில் அமெரிக்காவுடன் பேச்சுக்களில் ஈடுபட்ட 63 நாடுகளில் 43, அவ்வொப்பந்தம் தங்கள் தேசிய நலனைப் பாதிக்கும் என்று உணர்ந்ததும் பேச்சுக்களிலிருந்து வெளியேறி விட்டன என்று இட்ரிஸ் கூறினார்.