நாட்டில் நிகழும் ஒவ்வொரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையும் அவசர காலச் சட்டத்துக்கு புத்துயிரூட்டுவதற்கு காரணமாக சொல்வதை விட குற்றங்களை முறியடிப்பதற்கு உள்துறை அமைச்சு கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் கேட்டுக் கொண்டுள்ளார். அதனால் நாடும் நன்றாக இருக்கும் என அவர் சொன்னார்.
2,600 முன்னாள் அவசர காலச் சட்ட கைதிகளின் தலைமையில் இப்போது 260,000 கிரிமினல்கள் நாடு முழுவதும் உள்ளதாக அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளது பற்றி துவான் இப்ராஹிம் கருத்துரைத்தார்.
கிரிமினல்களை கைது செய்வதால் மலேசியாவில் கிரிமினல்களுக்கு துப்பாக்கிகள் எப்படி எளிதாகக் கிடைக்கின்றன என்ற கேள்விக்கு பதில் கிடைக்காது என அவர் இன்று ஒர் அறிக்கையில் குறிப்பிட்டார்.