பொதுத் தேர்தலுக்குப் பின் நஜிப்பின் செல்வாக்கு மேலும் கூடியுள்ளது

1-salleh13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நஜிப் அப்துல் ரசாக்கின் செல்வாக்கு நாளுக்கு நாள் கூடி வருவதாக சாபாவின் பிரபல அரசியல்வாதி சாலே சைட் கெருவாக் கூறுகிறார்.

“நஜிப், எதிர்த்தரப்பினர் கொடுக்கும் அரசியல் நெருக்கடிகளைப் பொருட்படுத்தாமல் மக்களுக்கு எது நல்லதோ அதைச் செய்வதில் கவனம் செலுத்துகிறார்”, என கோத்தா கினாபாலுவில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

நஜிப் கொண்டுவந்த அரசியல் உருமாற்றத் திட்டங்களால் பொதுத் தேர்தலில் அம்னோவுக்கு 30 விழுக்காட்டு வாக்குகள் கூடுதலாகக் கிடைத்தன என்று சாபா அம்னோ தொடர்புக்குழுத் துணைத் தலைவருமான சாலே கூறினார்.

நாடாளுமன்றத்தில் மாற்றரசுக் கட்சிகள் மூன்றும் (டிஏபி, பிகேஆர், பாஸ்) சேர்ந்து 89 இடங்களைப் பெற்றுள்ள வேளையில் அம்னோ தனியொரு கட்சியாக 88 இடங்களைப் பெற்றுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.