பாதுகாவலர் ஒருவர் சம்பந்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் சர்ச்சைக்கு இலக்கான முகமட் நெடிம் நஸ்ரி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளதாகத் தெரிகின்றது. இந்த முறை அவரது தந்தையின் அமைச்சில்.
சுற்றுப்பயண, பண்பாட்டு அமைச்சின் இணையத் தளத்தில் நெர்டிம் அமைச்சில் ‘சிறப்பு அதிகாரி’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது அந்த அமைச்சுக்கு அவரது தந்தை முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் தலைமை தாங்குகிறார். அந்த நியமனம் ‘உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் உதவுவது’ மீது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
அவர் அந்த இணையத் தளத்தில் ‘நெடிம் பின் நஸ்ரி அஜிஸ்’ எனப்
பட்டியலிப்பட்டுள்ளது. ஆனால் ‘சிறப்பு அதிகாரி’ என்ற முறையில் அவரது பொறுப்புக்கள் என்ன என்பதை அந்தப் பக்கம் தெரிவிக்கவில்லை.
அந்த விவகாரம் மீது பதில் அளிக்க அமைச்சர் விரும்பவில்லை என நஸ்ரியின் பத்திரிக்கை செயலாளர் தொடர்பு கொள்ளப்பட்ட போது தெரிவித்தார்.
naasamaa pochi intha naadu…!
naadu vilanggum.
பாவம் மக்கள்