‘அவதூறு’ தொடர்பில் அமெரிக்-கின் வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்தனர்

americkவழக்குரைஞர் அமெரிக் சித்து கடந்த மாதம் சுவாராம் நிதி திரட்டும் விருந்தின்  போது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மீது அவதூறான கருத்துக்களைச்  சொன்னதாக கூறப்படுவது தொடர்பில் அவருடைய வாக்குமூலத்தை போலீசார்  இன்று பதிவு செய்துள்ளனர்.

அந்த உரையின் உள்ளடக்கம் பற்றி குறிப்பாக நஜிப்புக்கு எதிராக தாம் ஏதும்  குறிப்பிட்டேனா இல்லையா எனப் போலீசார் விசாரித்ததாக அவர் சொன்னார்.

ஜுலை 17ம் தேதி நிகழ்ந்த அந்த விருந்தில் ‘பிரதமருக்கு எதிராக அவதூறு’  அறிக்கைகள் விடுக்கப்பட்டதாக Jaringan Melayu Malaysia (JMM) தலைவர்  அஸ்வாண்டின் ஹம்சா ஜுலை 31ல் சமர்பித்த புகார் அடிப்படையில் போலீசார்  நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமெரிக் தெரிவித்தார்.

என்றாலும் அந்த நிகழ்வில் தாம் சொல்லியது அவதூறும் இல்லை, தேச
நிந்தனையும் இல்லை எனத் தாம் நம்புவதாகவும் அவர் மலேசியாகினியிடம்  கூறினார்.