மருந்து விலைகள் மீது உறுதியாக இருக்கப் போவதாக சுப்ரா சூளுரை

subraபசிபிக் பங்காளித்துவ உடன்பாடு கையெழுத்திடப்பட்டால் மருந்து விலைகள் அதிகரிக்கக் கூடிய சாத்தியத்திற்கு எதிராக அரசாங்கம் ‘உறுதியான’ போக்கைப்  பின்பற்றும் என சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ் சுப்ரமணியம் கூறுகிறார்.

மருந்து விலைகளை  அதிகரிக்கும் எந்த நடவடிக்கையையும் தமது அமைச்சு  ‘ஆட்சேபிக்கும்’ என அவர் நேற்று நிருபர்களிடம் கூறினார்.

முன்னதாக அவர் மூலிகை மருந்து தொடர்பான புத்தகம் ஒன்றை வெளியிட்டார்.subra1

“அந்த விவகாரம் மீதான எங்கள் கருத்துக்களை நாங்கள் அனைத்துலக வாணிக  தொழியல் அமைச்சிடம் தெரிவித்துள்ளோம்,” என்றார் சுப்ரமணியம்.

என்றாலும் அந்த பசிபிக் பங்காளித்துவ உடன்பாட்டு பேச்சுக்களில் தமது  அமைச்சு ஒரு தரப்பு அல்ல என்றும் அவர் சொன்னார்.

அந்த உடன்பாட்டில் மலேசியா கையெழுத்திடுவதால் மலேசியாவுக்குக் கிடைக்கும்  நன்மைகள் மீது எதிர்க்கட்சிகளும் சிவில் சமூக அமைப்புக்களும் ஐயம்  தெரிவித்துள்ளன.