பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியில் பாஸ் தலைவரும் பெளத்த சமய இயக்கமும்

buddhistபாஸ் தலைவர் ஒருவரும் உள்ளூர் பெளத்த சமய இயக்கமும் ஒன்று சேர்ந்து அவர்களின் சமயங்களுக்கிடையில் சமயக் கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

பாரிட் புந்தார் எம்பி முஜாஹிட் யூசுப் ராவாவும் பெளத்த வஜ்ராலிங் இயக்கத்தின் தலைவர் ஷெராப் யோங்கும், தனிப்பட்டவர்களுக்கும் சமய அமைப்புகளுக்குமிடையில் “ஆரோக்கியமான, ஆக்கப்பூர்வமான, முனைப்பான” கலந்துரையாடல்கள் தொடர்வது அவசியமாகும் என்றனர்.

“ஒவ்வொரு சமயமும் தங்கள் சமயத்தவர்கள், மற்றவர்களை மதிக்க வேண்டும் என்பதையும் ஒரு பலஇனச் சமுதாயத்துக்கு எவ்விதத்திலும் பயன்படாத தீவிரவாத கருத்துகளை ஒதுக்க வேண்டும் என்பதையும் முனைப்புடன் எடுத்துரைக்க வேண்டும்”, என அவ்விருவரும் கூட்டு அறிக்கை ஒன்றில் கேட்டுக்கொண்டுள்ளனர்.