சாபா சுல்தான் என்று தம்மைப் பிரகனப்படுத்திக் கொண்டிருக்கும் முகம்மட் அக்ஜான் அலி முகம்மட், தாம் முன்னாள் மலேசியப் பிரதமர்கள் இருவரும் சூளு அரசும் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்ததாகக் கூறிக்கொண்டார்.
இன்று சாபாவில், குடியேறிகள் மீதான அரச விசாரணை ஆணையத்தில் (ஆர்சிஐ) சாட்சியமளித்த அவர், டாக்டர் மகாதிர் முகம்மட், அப்துல்லா அஹ்மட் படாவி ஆகியோரே அவ்விரு பிரதமர்களுமாவர் என்றார்.
“(சூளு சுல்தானாக பிரகடனம் செய்துகொண்டுள்ள) ஜமாலுல் கிராம், 1980-களில் மகாதிரைச் சந்திக்க ஏற்பாடு செய்தேன். ஆனால், அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை அறியேன்.
“அதன் பின்னர் இஸ்மாயில் கிராம்(ஜமாலுலின் சகோதரர்) அப்துல்லாவைச் சந்திக்க வந்தார்”.
அவர்கள் சாபா மீதான கோரிக்கையை கைவிட ஒப்புக்கொண்டதால்தான் சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்ததாக அக்ஜான் கூறினார்.
“ஆனால், 2000-இல் அவர்களின் நோக்கம் மாறிவிட்டது போலும். சாபா மீதான உரிமைக் கோரிக்கையை அனைத்துலக நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்ல விரும்பினார்கள்”, என்றாரவர்.
இதை எலாம் செய்து விட்டு பழியை எதிர்கட்ச்யின் மேல் சுமத்தினால் எப்படி?
எல்லா குளறுபடிக்கும் இந்த மகாதீரே காரணம் ! நரகா சூரனுக்கு thambi !
அப்படியானால், சபாவை விற்க முன் ஏற்பாடுகள் எல்லாம் முன்னாள் பிரதமர்களின் ஆசியோடுதான் நடந்திருக்கவேண்டும்?. பாவம், அப்பாவி போலீஸ்காரர்கள் பலியானதுதான் மிச்சம். செய்வினை உங்களை நிச்சயம் விரட்டும். காத்திருங்கள்.