நஸ்ரி: அமைச்சரின் தனியுரிமையைக் கேள்விகேட்கக் கூடாது

nazriஓர் அமைச்சருக்குத் தம் பேலையாள்களைத் தீர்மானிக்கும் உரிமை உண்டு. அதைக் கேள்விகேட்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது என்கிறார் சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ்.

அவரது அமைச்சில் அவரின் மகன் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருப்பது பற்றி செய்தியாளர்கள் வினவியதற்கு நஸ்ரி இவ்வாறு பதிலிறுத்தார்.

“நீங்கள் என்ன நினைத்தாலும் கவலையில்லை….அவர் என் மகன். அவரைச் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்ததில் எனக்கு மகிழ்ச்சியே”, என்றாரவர்.

தம் மகன் அமைச்சின் பணிகளில் தலையிடுவதில்லை என்றும் தம் தொகுதியில் இளைஞர்களுக்கான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதில் தமக்கு உதவியாக இருக்கிறார் என்றும் நஸ்ரி கூறினார்.

அவர் அமைச்சின் பணியாளர் அல்ல என்றும்  அவருக்கு அமைச்சிலிருந்து சம்பளம் கொடுக்கப்படுவதில்லை என்றும் அவர் விளக்கினார்.