சங்கப் பதிவதிகாரியுடன் (ஆர்ஒஎஸ்) நீண்ட இழுபறிக்குப் பின்னர் டிஏபி தனது மத்திய நிர்வாகக் குழுவுக்கு மறு தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளது.
கோலாலம்பூரில் நேற்றிரவு நடைபெற்ற இரண்டு மணி மத்திய நிர்வாகக் குழுக் கூட்டத்தில் அந்த முடிவு எடுக்கப்பட்டதாக மலேசியாகினியிடம் சில வட்டாரங்கள் தெரிவித்தன.
அந்தக் கூட்டத்துக்கு கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் தலைமை தாங்கினார்.
அந்தத் தகவலை டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் பின்னர் விடுத்த ஒர் அறிக்கையில் உறுதி செய்தார்.
ஆர்ஒஎஸ் டிஏபி பதிவை ரத்துச் செய்யக் கூடும் என்ற கவலையால் அந்த முடிவு எடுக்கப்பட்டது என்றார் அவர்.
“மறு தேர்தல் நடத்த வேண்டும் என்ற ஆர்ஒஎஸ் உத்தரவுக்கு சட்ட அதிகாரம் ஏதும் இல்லை என்ற டிஏபி சட்டப்பூர்வ நிலை வலுவாக இருந்தாலும் கட்சியின் பதிவு ரத்தாவதைத் தடுக்க மத்திய நிர்வாகக் குழுவுக்கு மீண்டும் தேர்தலை நடத்த அந்தக் குழு முடிவு செய்தது,” என்றார் கர்பால்.
“ஆர்ஒஎஸ் -ஸிடமிருந்து அந்த உத்தரவுக்கான காரணங்களைப் பெறுவதற்கு கட்சி ‘எல்லா முயற்சிகளையும் செய்தது,” என்றும் அவர் தெரிவித்தார்.
அருமையான முடிவு. மறுதேர்தலை நடத்த ஜ.செ.க. மறுத்திருக்குமேயானால், அதன் பதிவு ரத்தாவதை யாராலுமே தடுத்திருக்க முடியாது. மத்திய செயலவைக்கு நன்றி. ஜ.செ.க.வை காப்பாற்றி விட்டீர்கள்.