மகாதீர்: அதிகமான சுதந்திரத்தின் விலை கூடுதலான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்

mahathirசாலைகளில் கொலைகள் அதிகரித்துள்ள சூழ்நிலைக்கு மலேசியர்கள் தங்களைப்  பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர்  முகமட் கூறுகிறார்.

காரணம் அந்தச் சம்பவங்கள் ‘அதிகமான சுதந்திரத்தின் விலை’ என அவர்  சொன்னார்.

அதிகமான சிவில் உரிமைகள் வழங்கப்படும் போது அத்தகைய குற்றச்
செயல்களைத் தடுப்பதற்கு அதிகாரிகள் முன் கூட்டியே நடவடிக்கை எடுக்க  முடியாமல் போவதாக மகாதீர் குறிப்பிட்டார்.

“சுதந்திரம், தாராளமயம் என நீங்கள் எப்படி அழைத்தாலும் மக்கள்
கொல்லப்படுவதே அதற்குக் கொடுக்கப்படும் விலையாகும்.”

“ஒரு குற்றச் செயல் நிகழும் வரையில் அதனைத் தடுப்பதற்கு நீங்கள் எதுவும்  செய்ய முடியாது.”

“அப்பாவி மனிதர் ஒருவர் சுடப்படுகிறார். அவர் மரணமடைகிறார். அடுத்து நாம்  விசாரணைக்குச் செல்கிறோம்,” என மகாதீர் இன்று நிருபர்களிடம் கூறினார்.