நஸ்ரி: ஒற்றுமை அரசாங்கம் தேவை இல்லை

nazriபக்காத்தான் ராக்யாட்-உடன் ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்கும் யோசனையை  பிஎன் தெரிவிப்பது பயனற்றது, முதிர்ச்சியற்றது என சுற்றுப்பயண, பண்பாட்டு  அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் சொல்கிறார்.

“தேர்தல் நடைபெறும் போது முடிவுகள் மாறுகின்றன. ஒவ்வொரு முறையும் நாம்  ஒற்றுமை அரசாங்கத்தை அமைத்தால் தேர்தலை ஏன் நடத்த வேண்டும் ?” என அவர் ஷா அலாமில் நிருபர்களிடம் வினவினார்.

13வது பொதுத் தேர்தல் பிளவு ஏற்பட்டுள்ளதைக் காட்டுகின்றது என்னும்
எண்ணத்தை அரசியல்வாதிகள் முதலில் கைவிட வேண்டும் என்றும் நஸ்ரி சொன்னார்.

நாடாளுமன்றத்தில் உள்ள 222 இடங்களில் 133 இடங்களை பிஎன் வென்ற போதிலும் 2008ல் தான் இழந்த மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறத் தவறி விட்டது. என்றாலும் அதிகமான இடங்களை வெல்லும் கட்சி  அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்ற முறையின் கீழ் அந்த இடங்கள் பிஎன்  அரசாங்கத்தை அமைக்கப் போதுமானதாக இருந்தது.

“நீங்கள் அரசாங்கத்தை அமைக்க முடியாது என்ற சூழலில் நீங்கள் அதனை  ஏற்றுக் கொள்ள வேண்டும்,” என்றார் நஸ்ரி.

‘ஒற்றுமை அரசாங்க யோசனை மலேசியாவில் ஜனநாயகம் இன்னும் முதிர்ச்சி  பெறவில்லை என்பதையே அது காட்டுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.