‘கள்ளக் குடியேறிகள் பிரச்னையைத் தீர்க்க நஜிப்பின் பிஎன் இறுதியில் அரசியல் உறுதியைக் காட்டியது’

sabahசபாவில் வெள்ளம் போல் குவிந்துள்ள கள்ளக் குடியேறிகள் பிரச்னையைத்  தீர்ப்பதற்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலைமையிலான பிஎன் அரசியல்  உறுதிப்பாட்டைக் காட்டியுள்ளதாக அந்த மாநில துணை முதலமைச்சர் ஜோசப்  பைரின் கிட்டிங்கான் கூறினார்.

அவர் சபா குடியேறிகள் மீதான அரச விசாரணை ஆணையத்திடம் (ஆர்சிஐ)  199வது சாட்சியாக இன்று சாட்சியமளித்தார்.

கூட்டரசு அரசாங்கம் பல தசாப்தங்களுக்கு அந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு  விருப்பம் இல்லாமல் இருந்தது என்றார் அவர்.sabah1

“ஆர்சிஐ பரிந்துரைகளை வழங்கியதும் நடவடிக்கை நடப்புத் தலைமைத்துவம்  தயாராக இருப்பதாகத் தெரிகின்றது,” என்றும் பைரின் சொன்னார்.

நஜிப் ஆர்சிஐ-யை அமைக்க ஒப்புக் கொண்டதே அவரது அரசியல்  உறுதிப்பாட்டைக் காட்டியது என்றார் அவர்.

இதற்கு முன்னர் சபாவில் உள்ள பிஎன் உறுப்புக் கட்சிகள் அந்த விவகாரம் மீது  கூட்டரசு அரசாங்கத்திடம் பல முறை மன்றாடியுள்ளன. ஆனால் வாக்குறுதிகளைத்  தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை என பைரின் குறிப்பிட்டார்.

1985ம் ஆண்டு தொடக்கம் 1994ம் ஆண்டு வரை அவர் சபா முதலமைச்சராக  பணியாற்றியுள்ளார்.

தமது அரசாங்கம் நிலைத்தன்மைச் சீர்குலைவை எதிர்நோக்கியதால் கள்ளக்  குடியேறிகள் பிரச்னையை தீர்க்க தம்மால் அதிகம் செய்ய முடியவில்லை என்றும்  அவர் தெரிவித்தார்.