சரவாக் டிஏபி தலைவர் சோங் சியாங் ஜென்-னுக்கு எதிராக அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் போலீசில் புகார் செய்துள்ளதன்வழி தேச நிந்தனைச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார் என பிகேஆர் சாடியுள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு எதிரான அறிக்கைகளுக்காக தேச நிந்தனைச் சட்டத்தைப் பயன்படுத்த முடியாது என பிகேஆரின் சட்ட, மனித உரிமை பிரிவு தலைவர் லத்திபா கோயா (வலம்) ஓர் அறிக்கையில் கூறினார்.
தடுப்புச் சட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பதை நியாயப்படுவதற்காக அரசாங்கம் வேண்டுமென்றே நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்கு இடமளிப்பதாக சோங் குற்றம் சாட்டியிருப்பது குறித்து கைரி நேற்று போலீசில் புகார் ஒன்றைப் பதிவு செய்தார். அக் குற்றச்சாட்டு “ ஒரு வகை தேச நிந்தனை” என்றவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.
“இதில் ஆச்சரிப்பட ஒன்றுமில்லை. அம்னோ தேர்தல் நெருங்கி வருவதால் இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி கைரி அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார்”, என சரவாக் டிஏபியும் சாடியுள்ளது.
அம்னோவும், உத்துசானும், TV காரனும் சேர்ந்து DAP -யை மலாய்க்காரர்கள் ஒட்டு மொத்தமாக வெறுக்க வேண்டும் என்று இல்லாததையும் பொல்லாததையும் தேர்தலுக்கு முன் வாரி இரைத்தீர்களே அப்போ எங்கே போனது தேசிய நிந்தனை சட்டம்? கைரியும் ஓர் அரை வேக்காடு என்பதற்கு இதை விட வேறு அத்தாட்சி வேண்டுமோ?