‘சபா மக்கள் தொகையை மாற்றியதற்கு முஸ்தாபாவே பொறுப்பு’

mustaphaபிபிஎஸ் தலைமையிலான மாநில அரசாங்கத்தை வீழ்த்தும் பொருட்டு சபா மக்கள்  தொகையை மாற்றியமைக்கும் யோசனையை முதலில் முன்மொழிந்தவர் முன்னாள்  சபா முதலமைச்சர் முஸ்தாபா ஹருண் என குடியேறிகள் மீதான அரச விசாரணை ஆணையத்திடம் இன்று தெரிவிக்கப்பட்டது.

உஸ்னோ எனப்படும் பலவீனமாக இருக்கும் தொகுதிகளில் புதிய வாக்காளர்களை  பதியும் பொறுப்பை காலஞ்சென்ற முஸ்தாபா தமக்கு வழங்கியதாக மாட் ஸ்வாடி  அவி இன்று பிற்பகல் ஆர்சிஐ-யிடம் கூறினார்.

“உஸ்னோ பலவீனமாக இருக்கும் தொகுதிகளில் முஸ்லிம் வாக்காளர்
எண்ணிக்கையை அதிகரிப்பது என் வேலை,” என அவர் சொன்னார்.

“அவர்கள் அனைவரும் குடியேறிகள் அல்ல. வாக்காளர்களில் சிலர்
இராணுவத்தையும் போலீஸையும் சேர்ந்தவர்கள். தீவகற்ப மலேசியாவிலிருந்து  வந்த ஆசிரியர்களும் அதில் இருந்தனர்,” என அவர் சொன்னார்.

அந்த நேரத்தில் ஸ்வாடி Bank Pembangunan Malaysia Berhad வங்கியில் வேலை  செய்து வந்தார்.