போலீஸ்காரர்களில் 80 விழுக்காட்டினர் குற்றத் தடுப்பில் ஈடுபட்டுள்ளனர்

PDRMகுற்றப் புலனாய்வுத் துறை உட்பட போலீஸ் படையினரில் கிட்டத்தட்ட 80  விழுக்காட்டினர் குற்றத் தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய  போலீஸ் படைத் தலைவர் செயலகத்தின் நிறுவனத் தொடர்புப் பிரிவு உதவித்  தலைவர் ஏசிபி ராம்லி முகமட் சொல்கிறார்.

குற்றச் செயல்களை ஒடுக்குவதில் முழுப் போலீஸ் படையும்
சம்பந்தப்பட்டுள்ளதால் குற்றப் புலனாய்வுத் துறையில் 9 விழுக்காட்டினர் மட்டுமே  பணியாற்றுவதின் அடிப்படையில் போலீஸ் படை செயல்படவில்லை எனச் சில  தரப்புக்கள் குற்றம் சாட்டுவது நியாயமற்றது என அவர் சொன்னார்.

“குற்றப் புலனாய்வுத் துறையை மட்டும் கருத்தில் கொண்டு பார்க்க வேண்டாம்.  மாவட்ட போலீஸ் தலைவர்கள் முதல் போலீஸ் நிலையத் தலைவர்கள் வரை  முழுப் போலீஸ் படையும் குற்றத் தடுப்பு என்ற பொதுவான கடமையில்  சம்பந்தப்பட்டுள்ளனர்,” என ராம்லி குறிப்பிட்டார்.

அவர் போலீஸ் படையினரில் 9 விழுக்காட்டினர் மட்டுமே குற்றத் தடுப்பு
நடவடிக்கைகளுக்காக குற்றப் புலனாய்வுத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக டிஏபி  தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் விடுத்துள்ள அறிக்கைக்கும் பதில்  அளித்தார்.

 

TAGS: