பொது மக்களுக்கு ‘புதுக் கிராமம்’ திரையிடப்படுவதற்கு மலாய் ஆலோசனை மன்றம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
அந்தத் திரைப்படம் வரலாற்று உண்மைகளை மாற்றிக் காட்டுவதால் அதனை கற்பனை எனக் கருத முடியாது என அதன் தலைமைச் செயலாளர் ஹசான் மாட் சொன்னார்.
“நிறைய தியாகங்களைச் செய்துள்ள மலாய்க்காரர்களுக்கு ‘புதுக் கிராமம்’ ஆத்திரத்தை மூட்டும். கம்யூனிஸ்ட் அனுதாபிகளை குடியமர்த்த புதுக் கிராமங்கள் கட்டப்படுவதற்காக பெரும் பரப்பளவிலான மலாய் ஒதுக்கீட்டு நிலம் பிரிட்டிஷ் இராணுவத்துக்குக் கொடுக்கப்பட்டது,” என அவர் ஒர் அறிக்கையில் சொன்னார்.
அந்த ‘புதுக் கிராமம்’ திரைப்படத்தை ஆகஸ்ட் 6ம் தேதி மலாய் ஆலோசனை மன்றத்தின் 65 உறுப்பினர்கள் பார்த்தனர் என அவர் தெரிவித்தார். அவர்கள் மாறுபட்ட கருத்தைக் கொண்டுள்ள போதிலும் மறைமுகமான செய்தியை அந்தத் திரைப்படம் வழங்குவதை ஒப்புக் கொண்டனர் என்றார் அவர்.
அந்தத் திரைப்படம் கம்யூனிஸ்ட்களை ஹீரோக்களாகக் காட்டுகிறது என்றும் வசனங்கள் குழப்பமாக இருக்கின்றன என்றும் அவர்கள் கருதினர்.