டிஏபி மத்திய நிர்வாகக் குழுவுக்கு புதிய தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளது ‘குற்றத்தை ஒப்புக் கொள்வதற்கு சமமாகும்’ என அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின் சொல்கிறார்.
அவர் இன்று சன்வே பல்கலைக்கழகத்தில் சன்வே பொதுக் கொள்கை விரிவுரை நிகழ்வின் தொடக்க விழாவில் நிருபர்களிடம் பேசினார்.
ஆர்ஒஎஸ் என்ற சங்கப் பதிவதிகாரி கேட்டுக் கொண்டுள்ளது போல மத்திய நிர்வாகக் குழுவுக்கு மறு தேர்தலை நடத்த டிஏபி நேற்று ஒப்புக் கொண்டது.
டிஏபி பதிவு ரத்துச் செய்யப்படுவதைத் தடுப்பதற்கு அது தான் ஒரே வழி என அந்தக் கட்சியின் பிரச்சாரப் பிரிவுச் செயலாளர் டோனி புவா கூறினார்.
தவறு நிகழ்ந்துள்ளதாக ஆர்ஒஎஸ் கூறிக் கொள்வதை அங்கீகரிப்பதாக அதனைக் கருதக் கூடாது என அவர் மேலும் சொன்னார்.
சிந்தித்து தான் பேசுகிறாரா? DAP எந்த குற்றத்தையும் செய்திடவில்லை. தான் செய்த தவற்றை திருத்திக்கொண்டது. அதை ஏற்றுக்கொண்ட ROS , DAP மறுதேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. மறு தேர்தலுக்கான காரணத்தை ROS கூற வேண்டும் என DAP அடம்பிடித்தது. ROS மவுனம் சாதிக்கவே, மறுதேர்தலை நடத்த ஒப்புக்கொண்டுள்ளது. இது எப்படி குற்றமாகும். அரைவேக்காட்டுத்தனமாக பேசுகிறார் கைரீ.
தம்பி கைரி, உன்னுடைய மாமனார் துன் படாவி அவர்களை பல குற்றங்கள் சுமத்தி வலுக்கட்டாயமாக பதவியை துறக்க செய்தார்களே அப்போ குற்றத்தை ஒப்புக்கொண்டுதான் விலகினாரா? குற்றமே செய்யாதவரை குற்றவாளிதான் என்று தீர்மானம் செய்து விரட்டப்பட்டார் , வேறு வழியில்லை , போனார்., நீங்க சொல்லுறது பூனைக்கு பால் குடிக்க ….