மத்திய நிர்வாகக் குழுவு (சிஇசி)க்கு மறுதேர்தல் நடத்த வேண்டுமென்ற சங்கப் பதிவகத்தின் (ஆர்ஓஎஸ்) உத்தரவை எதிர்த்து நீதிமன்றம் செல்வது வீணான வேலை என்கிறது டிஏபி.
அதன் தொடர்பில் நீதிமன்றம் செல்லும் எண்ணம் கட்சிக்கு கிடையாது எனத் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
“சட்டவிரோத உத்தரவுக்கு எதிராக வாதாடி டிஏபி வென்றாலும் அக்கட்சி பதவி இரத்துச் செய்யப்பட்டு அதற்காக மீண்டும் ஒரு தடவை நீதிமன்றம் செல்ல வேண்டி வரும்.
“அதிலும் வெல்லலாம். ஆனால், அதற்கு பல மாதங்கள், ஆண்டுகள்கூட ஆகலாம். அதற்கிடையில் கட்சியின் நிலை திரிசங்கு நிலைதான், கட்சி பிழைத்திருப்பதே பெரும் பாடாகி விடும்”,என லிம் கூறினார்.
விவேகமான செயல் !