அரசாங்கச் சம்பளம் இல்லாமல் அமைச்சர்கள் உறவினர்களை வேலைக்குச் சேர்ப்பதற்கு ஒகே சொல்கிறார் நஜிப்

nazri1

அமைச்சர் அல்லது அரசாங்க நிர்வாக உறுப்பினர் ஒருவர் அரசாங்க சம்பளம்  அலவன்ஸ் சம்பந்தப்படாமல் குடும்ப உறுப்பினர் ஒருவரை உதவியாளராக  வேலைக்கு சேர்ப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை என பிரதமர் நஜிப் அப்துல்  ரசாக் கூறியிருக்கிறார்.

“அந்த உதவியாளரை அமைச்சர் சேர்த்து அரசாங்கத்திலிருந்து சம்பளம்
கொடுக்கப்படுவதை அனுமதிக்க முடியாது,” என்றார் அவர்.

“ஆனால் அந்த வேலை தன்னார்வ அடிப்படையில் செய்யப்பட்டு அமைச்சரது  அலுவலக உறுப்பினராக அந்த உதவியாளராக இல்லாத வரையில் எங்களுக்கு  எந்த ஆட்சேபனையும் இல்லை. அவர் திட்டங்களுக்கு உதவி செய்து  அரசாங்கத்திடமிருந்து அவருக்குப் பணம் ஏதும் கொடுக்கப்படாத வரையில் அது  ஒகே தான்,” என்றார் அவர்.

நஜிப் கெடா பெண்டாங்கில் சுங்கை தியாங் பெல்டா குடியேற்றப் பகுதியில்  நோன்புப் பெருநாள் நிகழ்வின் போது தேசிய குடியானவர் தினக்  கொண்டாட்டங்களையும் பெல்டா ஒருங்கிணைப்புத் திட்டத்தையும் தொடக்கி  வைத்த பின்னர் நஜிப் நிருபர்களிடம் பேசினார்.