சுவாராம்: போலீஸ் குற்றச் செயல்களை ஒடுக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்

naliniசுவாராமைத் ‘தேர்வு செய்து ஒடுக்குவதை’ நிறுத்திக் கொண்டு குற்றச் செயல்களை  முறியடிப்பதில் கவனம் செலுத்துமாறு அரசாங்கம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு சுவாராம் நிர்வாக இயக்குநர் இ நளினி இன்று ஒர் அறிக்கையில்  கூறியுள்ளார்.

ஜுலை 19ம் தேதி சுவாரம் நடத்திய நிதி திரட்டும் விருந்து பற்றிய போலீஸ்  விசாரணை “கால விரயம், மக்கள் வரிப்பண விரயம்’ என அந்த மனித உரிமைப்  போராட்ட அமைப்பு கருதுவதாகவும் அவர் சொன்னார்.

சுவாராம் அந்நிய நிதியை அறிவிக்கத் தவறி விட்டது எனக் கூறப்பட்டதின்  தொடர்பில் மலேசிய நிறுவன ஆணையமும் சங்கப் பதிவதிகாரி அலுவலகமும்  கடந்த ஆண்டு விசாரணை நடத்தின.

ஸ்கார்ப்பின் நடவடிக்கைக்கு நிதி திரட்டும் விருந்தை சுவாராம் நடத்திய பின்னர்  அதிகாரிகள் மீண்டும் அதனை விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.

அந்த விருந்தில் பேசிய பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வாரை  இன்று போலீசார் விசாரணைக்காக அழைத்தனர்.

ஏற்கனவே அந்த விருந்தில் பேசிய பிரபல வழக்குரைஞர் அமெரிக் சிங் சித்து,  சுவாராம் செயலக உறுப்பினர் சிந்தியா கேப்ரியல் ஆகியோரை போலீசார்  விசாரித்துள்ளனர்.

TAGS: