சூராவில் பெளத்தர்கள் தியானம் செய்வதற்கு இடமளித்த கோத்தா திங்கி செடிலி புசார் ஓய்வுத்தல உரிமையாளரின் நிரந்தர வசிப்பிடத் தகுதி(பிஆர்) பறிக்கப்பட்டது.
தேசிய பதிவுத்துறையுடன் அலோசனை கலந்த பின்னர் அம்முடிவு செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
“பிஆர் தகுதி நன்மை கருதி வழங்கப்படுவது. அது ஓர் உரிமை அல்ல”, என்றாரவர்.
கட்ட பஞ்சாயத்து நடத்தும் உள் துறை அமைச்சர், ‘the right to be heard’ என்ற வாசகத்தைக் கேட்கவில்லைப் போலும்!. இத்தகையோர் அமைச்சராவதற்கு தகுதி உடையவர்களா?
இம்முடிவு மதவெறியைக் காட்டுகின்றது! மானுடத்தை மறைந்துவிட்டனர். அஹ்மட் ஜாஹிட் ஹமிடி ஒரு … … …. …!
இதுவே பிற மதத்தினர் பாதிக்கப் பட்டிருந்தால் அமைச்சர் ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பில் கவனம் செலுத்திக் கொண்டிருந்திருப்பார்..