‘டிஏபி-யை அழிப்பதற்காக’ பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ‘பொய் சொல்லவும் அவதூறு பரப்பவும்’ தயாராக இருப்பதாக அந்தக் கட்சியின் தலைமைக் கொறடா அந்தோனி லோக் சியூ பூக் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் நிகழ்ந்த டிஏபி கட்சித் தேர்தல்கள் பற்றி பேராளர்களில் 753 பேருக்குத் தெரிவிக்கப்படவில்லை என நஜிப் சொன்னதாக நேற்று உத்துசான் மலேசியாவில் வெளியான செய்தி பற்றி அவர் குறிப்பிட்டார்.
“அந்த அறிக்கையை விடுத்ததின் மூலம் அம்னோ பிரச்சார முகவர்கள் கடந்த பல மாதங்களாகப் பரப்பி வந்த பொய்களை சட்டப்பூர்வமாக்கியுள்ளார்,” என லோக் சொன்னார்.
டிஏபி தேர்தலில் பங்கு கொள்வதற்கு 73 பேராளர்களுக்கு வாய்ப்புக்
கொடுக்கப்படவில்லை என்பதை சங்கப்பதிவதிகாரி (ஆர்ஒஎஸ்) நிரூபிக்கவே இல்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
“அது நிரூபிக்கப்படாத ஆதாரமற்ற குற்றச்சாட்டு. ஏனெனில் டிஏபி மத்திய நிர்வாகக் குழுவுக்கு மறு தேர்தலை நடத்த வேண்டும் என ஆர்ஒஎஸ் உத்தரவிட்டதற்கு காரணம் தெரிவிக்கப்படவில்லை,” என்றார் அவர்.
“கட்சித் தேர்தல் நோட்டீஸ் எல்லாப் பேராளர்களுக்கும் அஞ்சல் வழி
அனுப்பப்பட்டதற்கான ஆதாரம் ஆர்ஒஎஸ்-க்கு கொடுக்கப்பட்டது. ஆனால் அதனை ஆர்ஒஎஸ் அதனைப் பரிசீலிக்கவே இல்லை,” என்றும் லோக் குறிப்பிட்டார்.
பயப்படாதீர்கள்! நஜிப் கூறும் பொய்களால் DAP யை அசைத்துக் கூட பார்க்க முடியாது. மகாதிர் ஆட்சியில் 27-10-1987 அன்று DAP யின் 16 தலைவர்களை சிறையில் அடைத்தார் அன்றைய பிரதமருமான துன் மகாதீர். இந்த 16 பேர்களில் கர்பால், லிம் கிட் சியாங், டேவிட், பட்டு, லிம் குவான் எங் ஆகியோரும் அடங்குவர். அன்றைய கட்சி தொண்டர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. பல வெளிநாடுகளுக்கு சென்று கையெழுத்து வேட்டையாடினார் லீ லாம் தாய். ‘மகாதிர் ஓர் சர்வாதிகாரி’ என T-சட்டையில் அச்சடித்துக்கொண்டு, தன் தலைவர்கள் சிறையில் இருந்து வெளியாகும்வரை ‘தாடியை’ எடுக்கப்போவதில்லை என்றவாறு நாடெங்கிலும் வளம் வந்தார் கேமரன் மலை சிம்மாதிரி[அப்பளசாமி]. இப்பேற்பட்ட உறுதியானவர்கள் இன்னும் கட்சியில் இருக்கிறார்கள் என்பதை புதியவர்கள் மறந்துவிடவேண்டாம். எந்த கொம்பனாலும் கட்சியை அழிக்க முடியாது..