பினாங்கில் இவ்வாண்டு பினாங்கில் ஜனவரிக்கும் ஆகஸ்ட்-டுக்கும் இடையில் குற்றச் செயல்கள் கடந்த ஆண்டு அதே காலத்துடன் ஒப்பிடுகையில் 4.7 விழுக்காடு கூடியுள்ளன.
அந்தத் தகவலை மாநில போலீஸ் தலைவர் அப்துல் ரஹ்மான் ஹனாபி வெளியிட்டார்.
ஆயுதம் இல்லாத கொள்ளைகளும் திருட்டுச் சம்பவங்களும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் கூடியுள்ள போதிலும் எல்லா வகையான குற்றங்களும் அந்த அதிகரிப்பில் சேர்க்கப்படவில்லை என்றார் அவர்.
பினாங்கு போலீஸ் நோன்புப் பெருநாள் கொண்டாட்ட நிகழ்வு ஒன்றைத் தொடக்கி வைத்த பின்னர் அவர் நிருபர்களிடம் பேசினார்.
இவ்வாண்டு இறுதிக்குள் மாநிலத்தின் பல பகுதிகளில் மேலும் 34 கேமிராக்களைப் பொருத்த மாநில அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அப்துல் ரஹ்மான் சொன்னார்.
இது வரையில் தலை நிலத்தில் 24 கேமிராக்களும் தீவில் 60 கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.