‘அல்லாஹ்’ என்ற சொல் முஸ்லிம்களுக்குச் சொந்தமானது என வெள்ளிக் கிழமை தொழுகை உரை சொல்கிறது

allah‘அல்லாஹ்’ என்ற சொல்லை முஸ்லிம் அல்லாதார் பயன்படுத்த அனுமதிப்பது  முஸ்லிம்களுடைய இறையாண்மையையும் உரிமைகளையும் விட்டுக் கொடுப்பதற்கு  ஒப்பாகும் என சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை நேற்று வெளியிட்ட  வெள்ளிக் கிழமை தொழுகை உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அந்தப் பிரச்னையைப் புரிந்து கொள்ள விரும்புகின்றவர்கள் சில சமயச் சொற்கள்  முஸ்லிம்களுக்கு ‘சொந்தமானவை’ என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.  அதனைப் பயன்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கையும்  அத்துமீறல் என்றும் இஸ்லாத்தை அவமதிக்கிறது என்றும் கருதப்படக் கூடும்,” என  சிலாங்கூர் மாநில பள்ளிவாசல் இமாம் கைருல் அனுவார் முலிம் வாசித்த  தொழுகை உரையில் கூறப்பட்டிருந்ததாக இன்று சினார் ஹரியான் செய்தி
வெளியிட்டுள்ளது.

மற்ற சமயங்களைப் பின்பற்றுகின்றவர்கள் அந்த சொல்லை ‘தவறாகப் பயன்படுத்த’  அனுமதிக்கப்படுவது இஸ்லாத்திற்கு பாதகமாக முடியும் என்றும் அவர் கூடுதலாக  சொன்னதாகவும் அந்தச் செய்தி குறிப்பிட்டுள்ளது.