பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், நாட்டை வழிநடத்துவதில் “இலக்கைத் தொலைத்துவிட்டார்”, மலேசியா இப்போது “எந்திர விமானவோட்டி”யால் செலுத்தப்படுவதுபோன்று சென்று கொண்டிருக்கிறது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் பிகேஆரின் பாயான் பாரு எம்பி சிம் ட்சே ஸின்.
“பிரதமரின் பலவீனத்தால் நாடு கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இது மிகவும் கவலைக்குரியது”என்றாரவர்.
2009-இல், பிரமதரானபோது முதல் 100 நாள்களில் 11 புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்திய நஜிப், இரண்டாவது தவணையின் முதல் 100 நாள்களில் பயனான புதிய கொள்கை எதையுமே அறிமுகப்படுத்தவில்லை என்றவர் குறிப்பிட்டார்..