பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், கெராக்கானின் கோ சூ கூன்னைப்போல் 18 ஆண்டுகள் தாம் பதவியில் இருக்கப்போவதில்லை என்கிறார்.
அப்படி என்றால் இரண்டு தவணைகளுக்குப்பின் பதவி விலகுவாரா? “அப்படி நான் சொல்லவில்லையே”, என்றார்.
வெள்ளிக்கிழமை லிம். கொம்தாரில் அவரது அலுவலகத்தில் ஆங்கில நாளேடுகளுக்கு நேர்காணல் வழங்கியபோது இவ்வாறு குறிப்பிட்டார்.
“நிறைய பணிகள் காத்துக் கிடக்கின்றன. அவற்றில் கவனம் செலுத்த விடுங்கள்”,என்று லிம் வேண்டிக்கொண்டார்.
விட மாட்டார்கள் லிம்.. நாடு உருப்பட்டு விடுமே..
இரண்டு தவணை கவ்ரவம். அப்புறம் பழம் புளிக்க ஆரம்பித்து விடும் கவனம்.
கை சுத்தம் உள்ளவர்கள் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் பதவியில் இருக்கலாம்.
லிம் குவான் எங்கை விட சிறப்பாக ஆட்சி புரியக் கூடியவர்கள் பினாங்கு ஜ.சே.க.வில் உள்ளனர். இந்த தவனையோடு முதலமைச்சர் நாற்காலியை காலி செய்துவிட்டு மற்றவர்களுக்கு வாய்ப்பு தருவாரேயானால், பினாங்கில் மேலும் பல மாற்றங்கள் உருவாக வழி ஏற்படும். ஆனால், முதலமைச்சர் நாற்காலியை எளிதில் விடுபவரல்ல குவான் எங். [குறித்துக் கொள்ளுங்கள்.]
சொல்லிட்டாரு singgam ஜோசிய காரர் ! முதலமைச்சர் நாற்காலியை எளிதில் விட்டுக்கொடுப்பவர் குவான் எங்
ஒரு சிறந்த முதல்அமைச்சர் நல்ல பண்பு உள்ளவர் ,எதற்கும் அஞ்சாதவர் ,இவரின் நிறைய பேட்டிகளை பார்த்து இருக்கிறேன் ,எல்லாவறையும் சிந்தித்து ஆக்க பூர்வமான கருத்தே இருக்கும் .பினாங்கு மாநிலத்துக்கு கிடைத்த மிக பெரிய பொக்கிஷம் இவர் .இவருக்கு உண்மையில் மாநிலத்தை மேம்படுத்த வேண்டிய பணி நிறைய இருக்கிறது .