சிலாங்கூர் அரசாங்கத்திற்கும் செக்கிஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் இங் ஸ்வீ லிம்-முக்கும் எதிராக தாம் தொடுத்த அவதூறு வழக்கை சிலாங்கூர் அம்னோ தொடர்புக் குழுத் தலைவர் நோ ஒமார் மீட்டுக் கொள்கிறார்.
சிலாங்கூர் மாநில அரசுக்குச் சொந்தமான சிலாங்கூர்கினியின் 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 16-23 பதிப்பில் வெளியான அவ்விரு தரப்புக்களின் விளக்கத்தில் தாம் மனநிறைவு கொண்டதைத் தொடர்ந்து 2012, மார்ச் 14ம் தேதி தொடுத்த அந்த வழக்கை மீட்டுக் கொள்ள முடிவு செய்ததாக அவர் சொன்னார்.
“Pesawah Tuntut Noh Omar Letak Jawatan”, “Noh Omar Khianat Petani dan
Lesap RM110 juta Untuk Bantuan Petani” என்னும் தலைப்புக்களில் சிலாங்கூர் அரசாங்கம் தனது அதிகாரத்துவ ஏடான சிலாங்கூர்கினி வழி பிரசுரித்த பின்னர் தஞ்சோங் காராங் எம்பி-யுமான நோ அந்த அவதூறு வழக்கைத் தொடர்ந்தார்.
அவர் நேற்றிரவு தமது தொகுதியில் நிகழ்ந்த நோன்புப் பெருநாள் திறந்த
உபசரிப்பில் நிருபர்களிடம் பேசினார்.
எங்கே குப்பையெல்லாம் நடு தெருவிர்க்கு வந்து நாற்றமெடுக்கும் என்று எண்ணி வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டாரோ?