சுற்றுப்பயண, பண்பாட்டு அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸின் புதல்வர் முகமட் நெடிம் நஸ்ரி இப்போது தமது தந்தையின் தொகுதிக்கான சிறப்பு அதிகாரி-அமைச்சுக்கான சிறப்பு அதிகாரி அல்ல என அமைச்சின் இணையத் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே அமைச்சு ஊழியர் பட்டியலில் ‘சிறப்பு அதிகாரி’ என நெடிம்
குறிப்பிடப்பட்டிருந்தார். இப்போது அவர் ‘பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினருக்கான சிறப்பு அதிகாரி’ என எழுதப்பட்டுள்ளது.
அமைச்சு ஊழியராக நெடிம் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அவருக்கு அரசாங்கம் சம்பளம் கொடுக்கவில்லை என்றும் பாடாங் ரெங்காஸ் எம்பி-யான நஸ்ரிக்கு அவர் எந்த ஊதியமும் இல்லாமல் உதவி செய்கிறார் என கடந்த வெள்ளிக் கிழமை நஸ்ரி கூறியதைத் தொடர்ந்து அந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமது தொகுதியில் இளைஞர் விவகாரங்களில் நெடிம் தமக்கு உதவி செய்து வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
அம்னோ இளைஞர் அமைப்பின் புதிய ஊடகப் பிரிவின் அங்கீகாரத்துடன்
அம்னோ ஆதரவு வலைப்பதிவாளர்கள் உட்பட பல தரப்புக்கள் அதனை
“நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உதவுவது” என குற்றம் சாட்டியதற்கு நஸ்ரி அவ்வாறு பதில் அளித்தார்.