முஸ்லிம்களை மதம் மாற்ற புதிய தந்திரம் பயன்படுத்தப்படுவதாக ஒர் அமைப்பு சொல்கிறது

islam‘தொடர்பு முறை’ (contextualisation) என அழைக்கப்படும் ‘ஈவிரக்கமற்ற’  வியூகத்தின் வழி மலாய்க்காரர்கள் கிறிஸ்துவ சமயத்துக்கு மதம் மாற்றம்  செய்யப்படுவதாக ஒர் அரசு சாரா இஸ்லாமிய அமைப்பு ஒன்று கூறிக்  கொண்டுள்ளது.

அந்த வியூகத்தின் கீழ் மதம் மாறிய மலாய்க்காரர்கள் முன் தோற்றத்துக்குத்  தொடர்ந்து முஸ்லிம்களாக வாழ்ந்து வருவர் என அந்த அமைப்பு கூறியது.

20 மலாய் கிறிஸ்துவர்களைப் பேட்டி கண்ட அமெரிக்கப் பாதிரியார் ஒருவர்  பிஎச்டி பட்டத்துக்கு வழங்கியுள்ள ஆய்வுக் கட்டுரையில் அந்த வியூகம் விவரமாக  விளக்கப்பட்டுள்ளது என Pertubuhan Muafakat Sejahtera Malaysia (Muafakat)  சொன்னதாக மிங்குவான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.

“தங்கள் தந்தையருடன் தாங்கள் இன்னும் பள்ளிவாசலுக்குச் செல்வதாகவும்  நோன்பு இருப்பதாகவும் முஸ்லிம்களைப் போன்று வீட்டில் தொழுவதாகவும் மத  நம்பிக்கையற்ற அவர்களில் சிலர் ஒப்புக் கொண்டுள்ளனர்,” என அந்த  அமைப்பின் தலைமைச் செயலாளர் ஏ கரீம் ஒமார் கூறியதாகவும் அந்த ஏடு  செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த விஷயம் மீது கோலாலம்பூரில் நேற்று Pertubuhan-pertubuhan Pembela  Islam, Majlis Amal Islami Malaysia ஆகிய அரசு சாரா அமைப்புக்கள் ஏற்பாடு  செய்த ஆய்வரங்கு ஒன்றில் அவர் கட்டுரை சமர்பித்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.