சூராவை இடிப்பது பற்றி டாக்டர் மகாதீரிடம் “வேறு யோசனைகள்” உள்ளன

mahathirசூராவ் ஒன்றை பௌத்தர்கள் பயன்படுத்த அனுமதித்த ஒய்வுத் தல  உரிமையாளரான சிங்கப்பூரரின் நிரந்தர வசிப்பிடத் தகுதியை (பிஆர்) ரத்துச்  செய்தது கடுமையான நடவடிக்கை அல்ல என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர்  முகமட் கருதுகிறார்.

ஆனால் அந்த சூராவை இடிப்பது பற்றி அவர் மாறுபட்ட எண்ணத்தை
கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

“உரிமையாளருடைய பிஆர் தகுதியை மீட்டுக் கொள்ளும் உரிமை
அரசாங்கத்துக்கு உள்ளது.”

“ஆனால் சூராவை இடிப்பது பற்றி நான் வேறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளேன்,”  என்றார் அவர்.

அந்த சூராவை இடிக்குமாறு பொது மக்கள் கோரியிருந்தால் அதிகாரிகள் அதற்கு  இணங்குவது அவசியமாகும் என்றும் மகாதீர் கூறிக் கொண்டார்.

அவர் ஸ்ரீகெம்பாங்கானில் தாம் நடத்திய நோன்புப் பெருநாள் திறந்த இல்ல  உபசரிப்பில் நிருபர்களிடம் பேசினார்.