நஸ்ரி, நாட்டைவிட்டு வெளியேறு: பிஎன் ஆதரவு என்ஜிஓ

1 nazriஅரசாங்க-ஆதரவு மலாய்  என்ஜிஓ  ஒன்று,  சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர்  முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ்  “ஆணவத்துடனும், வீராப்புடனும்” நடந்துகொள்கிறார் எனச் சாடியுள்ளது.

தம் மகனைச்  சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்திருப்பதைத் தற்காத்துப் பேசிய நஸ்ரி,  “என் மகனுக்குச் சம்பளம் தேவையில்லை. அவனிடம் பணம் இருக்கிறது……..அவன் தந்தை ஒரு பணக்காரர்”, என்று கூறியதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்வினையாற்றிய ஜாரிங்கான் மலாயு மலேசியா (ஜேஎம்எம்) செயலாளர் ஹம்டான் முகம்மட் சாலே, நஸ்ரி மலேசிய அரசியலுக்குத் தேவையற்றவராக மாறிவிட்டார் எனக் குறிப்பிட்டதாக  நியூ ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

“நஸ்ரி, தம்மிடம் போதுமான பணம் இருப்பதாக நினைத்தால் அவர் பணி ஓய்வு பெற்று உல்லாச பயணம் செல்வதே நல்லது”, என்று ஹம்டான் கூறினார்.