போலீசார், “Ops Cantas Khas”என்னும் நடவடிக்கையைத் தொடங்கி, குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் முன்னாள் அவசரக்காலச் சட்டத் தடுப்புக் கைதிகளைத் தேடிப் பிடிப்பதில் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளனர்.
அந்நடவடிக்கை கடந்த சனிக்கிழமை தொடங்கியது என போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் கூறியதாக பெரித்தா ஹரியான் அறிவித்துள்ளது.
சந்தேகத்துக்கு உரியவர்கள் தடுத்து வைக்கப்பட்டு அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்களா என்று கண்டறியப்படும் என்றாரவர்.
இந்நடவடிக்கையைப் பொதுமக்கள் வரவேற்பதாகவும் அவர்கள் போலீசுடன் ஒத்துழைப்பதாகவும் அவர் சொன்னார்..
ஸ்ரீ சஞ்சீவ் அவர்களின் தந்தை நெகிரி செம்பிலான் மாநில போலிஸ் மீது கொண்டிருக்கும் சந்தேகம்.. உண்மையில் யார் இக்காலத்தில் உண்மையான குற்றவாளிகள் என்று சிந்திக்க வைக்கிறது!!!!
ஐயோ கடவுளே!!! என்னை மட்டும் காப்பாத்துப்பா!!!!!!!
போலிஸ் மீது மக்கள் கொண்டிருக்கும் அவநம்பிக்கைக்கு யார் காரணம்???
உண்மையில் மக்கள் சேவகனாக போலிஸ் தமது கடமையை செய்யுமானால் தேவையற்ற தூற்றுதலுக்கு இலக்காகவேண்டாம் அல்லவா!!!!!